நம் வாணியர் குலத்திற்கு பெருமை சேர்த்த இளவேட்டன் வாணியர் மந்தாரை மலையைப் போன்ற தோள்களை உடையவன் ஒப்பில்லாதவன் புகழ் பெற்றவன் இளவேட்டன் என்னும் பெயர் கொண்டவன் சிறந்தவன் அந்தணர்களுக்கும் துறவிகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வேண்டியவற்றை கொடுத்து எப்போதும் தர்ம சிந்தை உடையவன் .
சிறந்த வாணியச் செட்டி குலத்தில் பிறந்த அவன் அழகேசன் என்றொரு அரசனுக்கு நண்பனானான் . இந்த அரசன் தன் நண்பனான இளவேட்டன் வாணியனிடம் பொருள் அனைத்தையும் கொடுத்து உன் உறவினர்களுக்கும் உங்கள் வம்சத்திடம் வந்து தர்மம் கேட்பவர்களுக்கு பொருள் கொடுப்பதற்கும் அங்கிருந்து வாழ்வதற்கும் பாடி என்ற நாட்டை உனக்குத் தருகிறேன் என்று கூறினான் . அரசன்
இவ்வாறு சொன்னவுடன் இளவேட்டனின் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இளவேட்டனார் அவர்களே
இன்று நாங்கள் சொல்வது ஒன்று உண்டு அதை நீங்கள் தட்டி விடாதீர்கள் என்று நம் குல மக்கள் அனைவரும் கூறினார்கள். அவர் கூறியது என்னவென்றால் இந்த அரசன் இருக்கும்வரை உன்னுடைய எந்த சொல்லுக்கும் தடை இருக்காது எனவே இந்த அரசன் இருக்கும் போதே அவன் அளிக்கப்பட்ட இந்த ஊரை நமக்கு உரியதாகி விடு. அதனால் இந்த பூமி உள்ளவரை உன் புகழும் நம் வாணியர் குலத்தின் போகாது என்று கூறினார்கள் மேலும் சிலரோ பாடி என்ற சொல்லினால் நமக்கு பெருமை ஒன்றும் இல்லை எனவே பாடி என்ற பெயருடைய பெயருடன் கூடிய நாகரிக நகரத்தில் நாங்கள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அவர்களில் சிலர் கூறினார்கள்
இளவேட்டனும்
அரசனிடம் சென்று அரசினால் வழங்கப்பட்ட பாடி என்னும் நாட்டிற்கு எங்கள் மரபின் பெயரை வைத்து தரவேண்டும் என்று கேட்டான் .
சோழ அரசனும் பாடி என்னுமிடம் இனிமேல் வாணியம்பாடி என்று வழங்கப்படும் என்று சொன்னான். இவ்வாறு வாணியம்பாடி என்று பெயரிட்டவுடன் வைசியர் யாவரும் அவ்விடத்தில் குடியேறினர்.
அப்பொழுது தான் தாயும் தந்தையும் வேதங்களை நன்கு ஆராய்ந்து உணர்ந்த அந்தணர்கள் வாழும்படியாக நல்ல வீடுகளை நம் வாணியர்களுக்கு வாணியம்பாடியில் கட்டிக்கொடுத்தார்கள் . அப்படி அந்த ஊரிலிருந்து நம் வாணியர்கள் வாழும் காலத்தில் சடைமுடி உடையவரும் காலகாலருமாகிய சிவ பெருமான் இளவேட்டன் வாணியனின் கனவில் தோன்றி என்னப்பனே எனக்கு சற்று இருக்க இடம்தான் என்று வேண்டினான் .அதற்கு இளவேட்டனோ கனவில் வந்த சிவபெருமானிடம் உன்னுடைய பெயர் என்ன? நீ யார் ? என்று கேட்டார் .
அதற்கு சிவபெருமான் என் பெயர் மாதவன் ஆகும்.மருதவாணன் என்ற வாணியன் பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் நான், குற்றமில்லாதவன் , உங்கள் குற்றமற்ற விருந்தாளியாக இருப்பேன் என்றும் , என்னுடைய தேசம் உத்திரபதி என்று கூறினார். மேலும் நான் தாயும் தந்தையும் இல்லாத ஆண்டி எனக்கு மனைவியாக இரண்டு பேர் உண்டு அவர்களுள் ஒருத்தி என் தலையில் ஏறுவாள் மற்றொருத்தி என் இடப்பக்கத்தை சிறிதும் பிறருக்கு கொடுக்க மாட்டான். பிள்ளைகளில் மூத்தவன் என்னை சுற்றுவான் மற்றும் இளையவனோ உலகமெல்லாம் சுற்றுவான் ஆகையால் என்னை இங்கேயே இருக்கச் செய்தால் அது ஊரில் அந்தணர்களுக்கு கிடைக்கும் புகழை காட்டிலும் உங்கள் வாணியர்களுக்கு அதிகமாகும் என்று சிவபெருமான் சொன்னார்.கனவிலிருந்து விழித்து இளவேட்டன் பார்த்த போது அப்படி ஒருவரையும் காணவில்லை .
இவற்றையெல்லாம் பற்றி ஊராரிடம் சொன்னான். அவன் சொன்னதை கேட்ட அவர்கள் எல்லாம் கனவில் வந்தவர் பரமசிவனே என்று நினைத்து அழகிய கோவில் கட்டுவித்து சிவலிங்க மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து அதிலிருந்து அவருக்கு #இருந்து_வந்த_இறைவனார்
என்ற பெயரும் இட்டனர். ஆனால் இளவேட்டனோ சிவனுக்கு வேறு ஒரு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என கருதி அதில் தமது கனவில் வந்தால் நம்மூர் கோவில் அமைந்த சிவனுக்கு #சாம_அழகர் என்று பெயரிட்டார் .
நற்குணமுள்ள உயர்ந்தோர் துதிக்கும்படி கோவிலை கட்டினான். அவன் புகழ் நாடெங்கும் பெருகியது. விரைவில்
நான் அடுத்த வாணியர் பற்றிய செய்தியை அளிக்கிறேன்.
நன்றி வணக்கம்
அன்புடன்
உங்கள் சொந்தம்
ஜெயராஜ் வாணியர் அருப்புக்கோட்டை
விழுப்புரம் சந்தோஷ் செட்டியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக